வழிகாட்டும் கலப்பை... அகத்தைப் பண்படுத்த...

பணிக்குழு அறிமுகம்

மாதம் ஒரு பணிக்குழு அறிமுகம்- திருவிவிலியப் பணிக்குழு

அருள்தந்தை.பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
பணிக்குழுவின் இலக்கு
உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்”. (மாற்கு 16:15)

   இறைவார்த்தையால் எல்லா மக்களும் தேர்ச்சி பெற்றவர்களாய் நற்செயல்கள் அனைத்தும் செய்யும் தகுதி பெற முடியும் (2திமோ3:17). ஏனெனில் இறைவார்த்தையில் கடவுள் நம்முடன் பேசுகிறார். ‘இறைவார்த்தை உயிருள்ளது; ஆற்றல் வாய்ந்தது” (எபி 4:12). இறைவார்த்தை காட்டும் மதிப்பீடுகளை மக்கள் மனத்தில் ஆழப்படுத்தி எல்லார் வாழ்வையும் இறைவாக்கின் வழி கட்டிஎழுப்பிட வழிகாட்டுதல்.

திருவிவிலிய ஆர்வம்
   எல்லா இல்லங்களிலும் திருவிவிலியம் ஆளுக்கு ஒரு திருவிவிலயம் என்னும் நிலையை உருவாக்கிட தொடர்ந்து ஊக்கமூட்டி வழிகாட்டுதல் கொடுக்கப்படுகிறது. பங்குகளில் குறைந்த விலையில் விவிலியம் வழங்க முயற்சி எடுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
   காணிக்கை வழங்க உணவுப் பொருள்களை தவிர்த்துத் திருவிவிலியம் வழங்கிட வழிகாட்டுதல் தரப்படுகிறது. திருவிழாக்களில் பரிசுகள்இ அன்பளிப்புகள் வழங்கும் போது திருவிவிலியம், நற்செய்தி நூல், திருவிவிலியம் தொடர்பான நூல்கள் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த வழிகாட்டுதல் தரப்படுகிறது.

இறைவார்த்தை வழி மன்றாட்டு
   இல்லங்களில் நடக்கும் அனைத்து இன்ப துன்ப நிகழ்ச்சிகளிலும் திருவிவிலிய வாசகத்தோடு மன்றாடி தொடங்குகின்ற பழக்கத்தை ஏற்படுத்த பயிற்சிகள் வழியாக வலியுறுத்தப்படுகிறது. அருள்பணியாளர்கள் எடுத்துக்ாட்டாகத் திகழ்ந்து பயிற்சிகள் வழங்கி வருகிறார்கள்.

திருவிவிலிய வாழ்வு
   இறைவார்த்தைகளில் சிலவற்றை மனனம் செய்து சொல்லிக் கொண்டிருப்து விவிலிய அறிவு எனப் பலரும் தவறாக எண்ணுகின்றனர். திருவிவிலியம் எழுதப்பட்ட பின்னணி மற்றும் அவற்றில் வலியுறுத்தப்படும் கருத்துகளைப் பற்றிய அறிவைப் பெறுதலும் அதை இன்றைய காலச் சூழலுக்குப் பொருந்துமாறும் பொருள் தருமாறும் அலசி ஆய்வதுமே திருவிவிலிய அறிவாகும் என மக்கள் மனத்தில் பதிய வைக்க மறை ஒன்றிய அளவிலும், மறைவட்ட அளவிலும், பங்கு அளவிலும் திருவிவிலியப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

திருவிவிலியப் பணிக்குழு கடந்து வந்த பாதை
   நமது மறைமாவட்டம் தொடங்கப்பட்ட காலக்கட்த்திலிருந்து திருவிவிலியப் பணிக்குழுவின் வழியாக பயிற்சிகள் கொடுக்கப்பட்டு விவிலியம் சார்ந்த துண்டு பிரதிகள்இ விவிலிய விளக்க நூல்கள்இ நற்செய்திகளுகான தனித்தனி விளக்க நூல்கள் போன்றவை வெளியிடப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வந்துள்ளன. 1985 -ஆம் ஆண்டு காலகட்டங்களில் விடுமுறை விவிலியக் கல்வி பாடநூல்கள் உருவாக்கிட பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு நமது மறைமாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மறைமாவட்டங்களுக்கு பயிற்சி வழங்கி பாடநூல்கள் கொடுக்கப்பட்டு மாணவ மாணவியர் கோடை விடுமுறையில் விவிலியம் கற்று மகிழ படைப்புகள் வெளியிடப்பட்டு வெற்றி கண்டன. இன்று தமிழக விவிலியப் பணிக்குழு கோடை விடுமுறை விவிலியக் கல்வியில் பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றது.
   2020 ஆம் ஆண்டு தென்மண்டல விவிலியப் பணிக்குழு தொடங்கப்பட்டு அருள்பணி.நெல்சன் பால்ராஜ் அடிகள் செயலராக இருந்து பல முயற்சிகள் மேற்கொண்டு செயல்திட்ங்களை முன்னெடுத்தார்கள். இணையவழி வினா - விடை போட்டிகள், டிஜிட்டல் வழி விவிலிய வினா - விடை போட்டிகள், நேரடி வினா - விடை போட்டிகள், மாணவ மாணவியர்களுக்கான விவிலியப் போட்டிகள் என பல வழிகளில் விவிலிய ஆர்வத்தை விவிலியப் பணிக்குழு மக்களுக்கு கொடுத்து வருகின்றது. திருவிவிலிய வகுப்புகள் மறைவட்ட அளவிலும் மறைஒன்றிய அளவிலும் கொடுக்கப்பட்டு வருகின்றது. 2025 ஜூன் திங்களில் அருள்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா அடிகள் திருவிவிலியப் பணிக்குழு செயலாளராகப் பொறுப்பேற்று மேற்கண்ட பணிகளில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு செயல்படுத்தி வருகிறார்கள்.